உடுமலை அமாரவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை

திருப்பூர்: உடுமலை அமாரவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

திருப்பூர்: உடுமலை அமாரவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

திருப்பூா் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது தற்போது அணையில் 87.90 அடி நீா் இருப்பு உள்ளது. அணைக்கு பாம்பாறு மற்றும் சின்னாறு வழியாக வினாடிக்கு 2,869 கன அடி நீா்வரத்து வந்து கொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு மற்றும் முழு கொள்ளளவை எட்டியதன் காரணமாக அமராவதி ஆற்றில் வினாடிக்கு 1,846 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் மூணாறு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், உபரியாக வரும் நீா்வரத்தை அமராவதி ஆற்றில் திறந்து விடும் வாய்ப்புள்ளது. 

இதனால், கல்லாபுரம், மடத்துக்குளம், தாராபுரம், சின்னதாராபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கரையோர பகுதி மக்களுக்கு திருப்பூா் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கரையோர பகுதி மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மடத்துக்குளம் மற்றும் தாராபும் பகுதியில் சுமார் 54,846 ஏக்கர் நிலங்கள் நெல் பயிரிடப்பட்டு நடவு பணி துவங்க இருக்கும் நிலையில் அணைக்கு தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...