கோவை: கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் எனவும், தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பெய்து வருவதாகவும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "தென்மேற்கு பருவமழையானது ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் முடிவடையும். அவ்வாறு ஜூன் மாதம் தொடங்கிய மழை மூலம், அம்மாதம் 43 மி.மீ கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் 54 மி.மீ பெய்துள்ளது. ஜூலை மாதம் 68.5 மி.மீ எதிர்பார்த்த நிலையில் 73.5 மி.மீ மழை பெய்துள்ளது.
அதே போல் ஆகஸ்ட் மாதம் 31 மி.மீ வரை மழை எதிர்பார்க்கப்படுகிறது தற்போது வரை 10 மி.மீ மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை 209 மி.மீ வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை 137 மி.மீ வரை பெய்துள்ளது.
கோவையைப் பொறுத்தவரையில் அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நேற்று கோவை மாவட்டம் சின்ன கல்லாறு பகுதியில் 120 மி.மீ, வால்பாறையில் 100 மி.மீ, பொள்ளாச்சியில் 20 மி.மீ மழை பெய்துள்ளது.
நீலகிரி மாவட்டம், நடுவட்டம் பகுதியில் 70 மி.மீ, ஊட்டியில் 10 மி.மீ மலை மழை நேற்று பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவையில் காற்றின் வேகம் 12 முதல் 14 கிலோ மீட்டர் வேகம் வரை வீச வாய்ப்புள்ளது. கடந்த இரு தினங்களாக 17 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வந்தது. காலை நேர வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸ், இரவு நேர வெப்ப நிலை 23 முதல் 24.5 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது." என்றார்.