கலைஞர் என்ற நான்கே எழுத்துக்களில் ஒரு நூற்றாண்டை அடக்கலாம் : கவிஞர் வைரமுத்து கண்ணீர் பேட்டி

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிக்கும் ராஜாஜி ஹாலுக்கு சற்று சற்று நேரத்திற்கு முன்பு கவிஞர் வைரமுத்து வந்தார். அவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பேழை அருகே சென்றதும், உணர்ச்சி மிகுதியால் கதறி அழுதார்.

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிக்கும் ராஜாஜி ஹாலுக்கு சற்று சற்று நேரத்திற்கு முன்பு கவிஞர் வைரமுத்து வந்தார். அவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பேழை அருகே சென்றதும், உணர்ச்சி மிகுதியால் கதறி அழுதார்.

கண்ணாடி பேழை அருகே மண்டியிட்டு அழுத வைரமுத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒருவரின் மறைவு என்பது இயற்கை என்று சிலர் கருதலாம். பெரியார் மறைவின் போது கருணாநிதி ஒரு கடிதத்தை எழுதினர். அதில், "தாஜ்மகாலுக்கு வயதாகிவிட்டது என்ற காரணத்தால் அது பூமிக்குள் புதைந்து போனால் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அது போலத்தான் பெரியாரும்." என்று குறிப்பிட்டிருந்தார்.

தற்போது அவரது மறைவையும் அதே போலத்தான். அவரது மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தலைவர் என்பதன் நிமிர்ந்த நோக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அவர். மாபெரும் கட்சியை 5௦ ஆண்டு காலம் வழிநடத்திய பெருமையை அவர் பெற்றுள்ளார். இசைக்குடும்பத்தில் பிறந்த அவர் முத்தமிழுக்கும் பெருமை சேர்த்தார்.

போராளியாய் பிறப்பவர் படைப்பாளியாய் ஆவதில்லை. படைப்பாளி போராளியாவதில்லை. ஆனால், படைப்பாளியாகவும், போராளியாகவும், அரசனாகவும் இருந்தவர் தற்போது தேசியக்கொடி போர்த்தப்பட்டு கிடக்கிறார்." என்ற கூறி கண்ணீர் வடித்தார்.

மேலும், "35 ஆண்டுகளாக தினமும் எங்களுக்குள் காலை வேளையில் இருந்த உரையாடல் முடிந்துவிட்டது. அவர் எழுதிய புத்தகங்களை அடுக்கி வைத்தால் அவரை விட உயரமாக இருக்கும். கலைஞர் என்ற நான்கு எழுத்துக்குள் ஒரு நூற்றாண்டை அடக்கிவிட முடியும்." என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...