சென்னை: உடல்நலக்குறைவால் காலமான தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த டி.டி.வி., தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்., ராஜாஜி அரங்கிற்கு வந்தனர்.
சென்னை: உடல்நலக்குறைவால் காலமான தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த டி.டி.வி., தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்., ராஜாஜி அரங்கிற்கு வந்தனர்.

10 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு, காவேரி மருத்துவமனையில் உயிரிழந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் தொண்டர்களின் கூட்ட வெள்ளத்தில் கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, நள்ளிரவு 1 மணி வரை உறவினர்கள் மற்றும் குடும்பத்தாரின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நடிகர் ரஜினிகாந்த் உள்பட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, தொண்டர்கள் புடைசூழ கருணாநிதியின் உடல் சி.ஐ.டி., காலனியில் உள்ள கனிமொழியின் இல்லத்திற்கு அஞ்சலிக்காகக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு திரையுலகப் பிரபலங்கள் ஒய்.ஜி. மகேந்திரன், மயில்சாமி மற்றும் விஷ்ணு உள்பட ஏராளமானத் தொண்டர்கள் அதிகாலை 3 மணி வரை அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து எடுத்துவரப்பட்ட கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தயாராக இருக்கின்றனர். இந்த நிலையில், கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த டி.டி.வி., தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்., ராஜாஜி அரங்கிற்கு வந்தனர்.