மெரினா நினைவிடம் விவகாரம் : கோவையில் பல்வேறு இடங்களில் தி.மு.க., கறுப்புக் கொடியேந்தி போராட்டம்

கோவை: மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க அனுமதிக்கக் கோரி கோவையில் தி.மு.க., கறுப்புக் கொடி ஏந்திப் போராட்டம் நடத்தப்பட்டது.


கோவை: மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க அனுமதிக்கக் கோரி கோவையில் தி.மு.க., கறுப்புக் கொடி ஏந்திப் போராட்டம் நடத்தப்பட்டது. 

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் இன்று மாலை காலமானார். 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு உரிய கவுரவம் வழங்கவேண்டும். மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் தி.மு.க., சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சட்ட சிக்கல் இருப்பதால், மெரினாவுக்கு பதிலாகக் காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கத் தயார் என அரசு விளக்கமளித்தது. 

இந்த நிலையில், கோவை மாவட்டம் டவுன்ஹால் பகுதியில் உள்ள செட்டிவீதியில் மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க., தொண்டர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கறுப்புக் கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள துடியலூர் பகுதியிலும் 50-க்கும் மேற்பட்ட தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், கோட்டைமேடு பகுதியில் ஏராளமான தி.மு.க.,வினர் கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், மெரினாவில் நினைவிடம் அமைக்கக் கோரி போராட்டம் நடத்தினர்.

இதேபோல, சென்னை மெரினா உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க அனுமதிக்கக் கோரி தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...