கோவை மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி

கோவை: உடல்நலக்குறைவால் காலமான தி.மு.க., தலைவர் கருணாநிதியின் திருவுருப்படத்திற்கு கோவை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.


கோவை: உடல்நலக்குறைவால் காலமான தி.மு.க., தலைவர் கருணாநிதியின் திருவுருப்படத்திற்கு கோவை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். 



கடந்த 11 நாட்களாகக் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், மாநிலம் முழுவதும் உள்ள தி.மு.க., நிர்வாகிகள் சென்னைக்கு விரைந்த வண்ணம் உள்ளனர். இதனால், சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகம் முழுவதும் கருணாநிதியின் மறைவிற்கு தி.மு.க., தொண்டர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், கட்சியின் அலுவலகங்களில் உள்ள கட்சிக் கொடிக் கம்பத்தில் கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டு வருகின்றன. 



இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் வடகோவையில் உள்ள தி.மு.க., அலுவலகத்தில் கருணாநிதியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து தி.மு.க., தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். பெரும்பாலான நிர்வாகிகள் கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னைக்கு சென்றிருப்பதால், கோவை மாவட்ட தி.மு.க., அலுவலகம் வெறிச்சோடியே காணப்பட்டது. 



இதனிடையே, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவு தொடர்பான செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த கோவை  மாவட்ட பொள்ளாச்சி வடக்கு மத்திய ஒன்றியம் குள்ளக்பாளையம் பகுதியைச் சேர்ந்த உறுப்பினர் கனகராஜ் என்பவர் மாரடைப்பால் மரணமடைந்தார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...