நீலகிரி: கூடலூர் அருகே ராஜநாகத்தை துன்புறுத்தி செல்ஃபி எடுத்த 5 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

கடந்த 4-ம் தேதி சேரம்பாடி பசாரை ஒட்டிய கன்னம்பையல் சாலையில் மரத்தில் ராஜநாகம் ஒன்று இருந்துள்ளது. இதைக் கண்ட சிலர், அதனைப் பிடித்து துன்புறுத்தி செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தனர். இந்தக் காட்சி வைரலாக பரவிய நிலையில், கூடலூர் வன அலுவலர் திலீப்புக்கு புகார் வந்தது. பின்னர், வனவிலங்குகளைக் கொடுமைப்படுத்தியதாக சேரம்பாடி வனச்சரகர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது, ராஜநாகத்தை துன்புறுத்தியவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், ராமானுஜம், தினேஷ் குமார், யுகேஸ்வரன், விக்னேஷ் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த வனத்துறையினர், தலைமறைவாகி இருக்கும் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.