சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தொண்டர்கள் மருத்துவமனையின் முன்பு குவிந்து வருவதால் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தொண்டர்கள் மருத்துவமனையின் முன்பு குவிந்து வருவதால் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. முக்கிய உடல் உறுப்புகளின் இயக்கத்தைப் பராமரிப்பது சவாலாக உள்ளது என்றும் கூறியுள்ளது. இதையடுத்து, மருத்துவமனைக்கு ஸ்டாலின், அன்பழகன் மற்றும் தி.மு.க., எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

மேலும், காவேரி மருத்துவமனையில் முன் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். ‘எழுந்து வா தலைவா’ என அவர்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டநிலையில், ஏராளமானோர் அங்கு குவிந்து வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை முன்பாக போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், இரவு முழுவதும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருக்க வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.