கரும்புக்கடை - நஞ்சுண்டாபுரம் இடையிலான இணைப்பு சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி மனு

கோவை: கரும்புக்கடை - நஞ்சுண்டாபுரம் இடையிலான இணைப்பு சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி குடியிருப்புவாசிகள் மற்றும் விவசாயிகள் மனு அளித்தனர்.

கோவை: கரும்புக்கடை - நஞ்சுண்டாபுரம் இடையிலான இணைப்பு சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி குடியிருப்புவாசிகள் மற்றும் விவசாயிகள் மனு அளித்தனர். 

ஆத்துப்பாலம் - உக்கடம் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இணைப்பு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கரும்புக்கடை முதல் நஞ்சுண்டாபுரம் பகுதி வரை 6 கிலோ மீட்டர் தூரம் இணைப்பு சாலை அமைக்கப்பட உள்ளது.

இந்த சாலை அமைப்பதால் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுமெனவும், அத்திட்டத்தை கைவிட கோரியும் சாரமேடு பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், சாரமேடு பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கிய நிலையில், ஆக்கிரமிப்பு எனக்கூறி அகற்ற முயற்சிக்கின்றனர். இதனால், 300 குடியிருப்புகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே, உள்ள சாலைகளை மேம்படுத்தினாலே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். இல்லையெனில், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை தலைமை செயலகத்தில் ஒப்படைப்போம், இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...