8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக நடைப்பயணம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் கைது

கோவை : சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தடையை மீறி சேலம் நோக்கி நடைப்பயணம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினரை மேட்டுப்பாளையத்தில் போலீசார் கைது செய்தனர்.

கோவை:  சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தடையை மீறி சேலம் நோக்கி நடைப்பயணம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினரை மேட்டுப்பாளையத்தில் போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 



இந்த நிலையில், சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் தடையை மீறி சேலம் நோக்கி நடைப்பயணம் செல்ல முயன்றனர். பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தொழிற்சங்க அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட சுமார் 40 பேரை, போலீசார் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

அப்போது, சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோதப் போக்கினை கண்டித்தும் முழக்கமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், தடையை மீறி நடைப்பயணம் செல்ல முயன்ற அவர்களை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...