கோவை : சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தடையை மீறி சேலம் நோக்கி நடைப்பயணம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினரை மேட்டுப்பாளையத்தில் போலீசார் கைது செய்தனர்.
கோவை: சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தடையை மீறி சேலம் நோக்கி நடைப்பயணம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினரை மேட்டுப்பாளையத்தில் போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் தடையை மீறி சேலம் நோக்கி நடைப்பயணம் செல்ல முயன்றனர். பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தொழிற்சங்க அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட சுமார் 40 பேரை, போலீசார் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அப்போது, சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோதப் போக்கினை கண்டித்தும் முழக்கமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், தடையை மீறி நடைப்பயணம் செல்ல முயன்ற அவர்களை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.