திருப்பூர்: பேருந்து முன்பதிவு அலுவலகத்தில் குழந்தைகள் குப்பைகள் போட்டதால், கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய அலுவலர்களைக் கண்டித்து படுகாயமடைந்த தந்தை பேருந்து முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.
திருப்பூர்: பேருந்து முன்பதிவு அலுவலகத்தில் குழந்தைகள் குப்பைகள் போட்டதால், கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய அலுவலர்களைக் கண்டித்து படுகாயமடைந்த தந்தை பேருந்து முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.
திருப்பூரைச் சேர்ந்த வள்ளிகணேசன் சென்னையில் உள்ள தனது உறவினர் இல்ல விஷேசத்திற்கு செல்வதற்காக நேற்றிரவு 'பாரத் டிராவல்ஸ்' என்கிற தனியார் ஏஜென்சி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அதற்காகப் பேருந்து நிறுத்தம் சென்ற அவர், பேருந்து தாமதமானதால் டிக்கெட் முன்பதிவு செய்த அலுவலகத்தில் காத்திருந்தார்.

அப்போது, அவருடன் இருந்த அவரது குழந்தைகள் சாக்லெட் சாப்பிட்டு விட்டு காகிதங்களை ஆங்காங்கே வீசியதோடு அலுவலகத்தின் சுவர்களையும் கரையாக்கியுள்ளனர்.
இதனைக் கண்ட அலுவலக மேலாளர் மற்றும் ஊழியர்கள் வள்ளி கணேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரை தாக்கவும் செய்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த வள்ளிகணேசன் சென்னை செல்ல இருந்த தனியார் பேருந்தை முற்றுகையிட்டு குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வள்ளி கணேசனிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு, அவரை சமாதானப்படுத்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் திருப்பூர் - அவிநாசி சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
