கோவை: தொடர் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் அருவி சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக நாளை முதல் திறக்கப்படுகிறது.

தென்மேற்குப் பருவமழைக் காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. மேலும், சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால், மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் முக்கிய ஒன்றாகத் திகழும் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த ஜுன் மாதம் 9-ம் தேதி முதல் 17 நாட்கள் பொதுமக்கள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பின்னர், 21-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.
இருப்பினும், கோவை குற்றால அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்ததாலும், பராமரிப்புப் பணிகள் காரணமாகவும் மீண்டும் கோவை குற்றாலம் அடைக்கப்பட்டது. பின்னர், அவ்வப்போது, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறையும் போது அருவியை சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக திறக்கப்படுவதும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அருவி மூடப்படுவதுமாக இருந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில், சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழையின் அளவு குறைந்ததால், அருவியில் தண்ணீர் கொட்டுவதும் குறைந்துள்ளது. எனவே, வனத்துறையினரின் அனுமதியுடன் 48 நாட்களுக்குப் பிறகு நாளை முதல் கோவை குற்றாலம் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை தினம் என்பதால் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.