கோவை: அன்னூர் அருகே வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் தலைமைக் காவலர் பாக்கியம் உயிரிழந்தார்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றின் விசாரணைக்காக அன்னூர் காவல் நிலையத்தின் தலைமை காவலரான பாக்கியம் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார்.
பணியினை முடித்து விட்டு மீண்டும் காவல் நிலையம் செல்ல மேட்டுப்பாளையம்-சத்தி சாலை வழியாக அறிவொளி நகர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில், படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்த அவருக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார். விபத்து தொடர்பாக, அன்னூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.