கோவை : நவஇந்தியா - ஆவாரம்பாளையம் சாலையில் நிலத்தின் அடியில் இருக்கும் குழாய் உடைந்து ஒருவாரமாகத் தண்ணீர் வெளியாகி வருவதால், அப்பகுதி குளம் போல காட்சியளிக்கிறது.

நவஇந்தியா - ஆவாரம்பாளையம் சாலையில் தனியார் கல்லூரிக்கு அருகே செல்லும் சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்த சாலைகளுக்கு அடியில் தண்ணீர் குழாய்கள் பதிக்கப்பட்டு அங்கிருக்கும் குடியிருப்புகளுக்கும், நிறுவனங்களுக்கும் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த சாலைக்கு அடியில் செல்லும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் பீய்ச்சி அடித்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அச்சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "கடந்த ஒரு வார காலமாகவே தண்ணீர் வீணாகிக் கொண்டு தான் இருக்கிறது. ஆவாரம்பாளையம் பகுதிக்கு தண்ணீர் திறக்கும் போது இந்த இடத்தில் தண்ணீர் வீணாகிறது. இது உப்புத் தண்ணீரா..? அல்லது குடிநீரா..? என்று தெரியவில்லை. எனினும், தண்ணீரை வீணாக்காமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றனர்.

ஒருவார காலமாக வீணாகும் தண்ணீர் குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.