தொடர்ந்து மிரட்டுகின்றனர்; வெளியில் நடமாடவே பயமாக இருக்கிறது - நடிகை சுருதி

கோவை: காவல்துறையினர் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதாகவும், இதனால் வெளியே நடமாடவே பயமாக இருப்பதாகவும் நடிகை சுருதி தெரிவித்துள்ளார்.

கோவை: காவல்துறையினர் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதாகவும், இதனால் வெளியே நடமாடவே பயமாக இருப்பதாகவும் நடிகை சுருதி தெரிவித்துள்ளார்.

 

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இளைஞர்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்ருதி, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து, இன்று கோவை 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான அவர், கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், காவல் துறையினர் தொடர்ந்து எனக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். விசாரணையின் போது காவல் துறை அதிகாரிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம் ஆகிய அமைப்புகளுக்கு புகார் அனுப்பியுள்ளேன். அந்த ஆணையங்களிடம் ஆதாரங்களைக் கொடுக்க உள்ளேன்.

அடையாளம் தெரியாத எண்களில் இருந்து பலர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். என்னை கடத்தி கற்பழித்து விடுவதாக மிரட்டல் விடுக்கின்றனர். தொடர் மிரட்டல்களால் வெளியே நடமாட பயமாக உள்ளது. லண்டனில் படிக்க செலுத்திய ரூ.23 லட்சம் பணத்தை முடக்க காவல் துறையினர் முயற்சிக்கின்றனர். இந்த வழக்கை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன்." என்றார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...