கோவையில் கரும்புகையை கக்கும் அரசுப் பேருந்துகள் ; சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார்

கோவை : அரசுப் பேருந்துகளில் இருந்து வெளியாகும் கரும்புகையினால், சுவாசக் கோளாறு போன்ற பிரச்சனைகளை சந்திப்பதாகவும், இதனை தடுக்க போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை : அரசுப் பேருந்துகளில் இருந்து வெளியாகும் கரும்புகையினால், சுவாசக் கோளாறு போன்ற பிரச்சனைகளை சந்திப்பதாகவும், இதனை தடுக்க போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கோவையில் தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் மொத்தம் 1,075 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில், 722 பேருந்துகள் நகர் பேருந்துகளாகவும், 353 வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளாகவும் உள்ளன. இதனிடையே, அண்மையில் 172 புதிய பேருந்துகள் கோவை மாநகருக்கு தமிழக அரசு அறிவித்தது. அதில், 65 பேருந்துகள் புதியதாகவும், மீதம் பழைய பேருந்துக்கு பதிலாக மாவட்ட நிர்வாகத்தால் பெற்றுக் கொள்ளப்பட்டது. 



இந்த நிலையில், பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் இருந்து கரும்புகை வெளியேறுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

"முறையான பராமரிப்பு இன்மை, பழுதடைந்த வாகன உதிரி பாகங்களை மாற்றாததே கரும்புகை வெளியேறக் காரணம்," என்கிறார் ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்து ஊழியர்.



இந்த கரும்புகையால், வாகனங்களில் செல்பவர்களுக்கு சிறிது நிமிடங்கள் சாலையே தெரியாத அளவிற்கு புகை சூழ்ந்து கொள்வதால், வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. அதுமட்டுமில்லாமல், பொதுமக்கள் சுவாசக் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கும் தள்ளப்படுகின்றனர்.



இது குறித்து வாகன ஓட்டி கே. ரூபன் கூறுகையில்," சில நேரங்களில் கரும்புகையினால், சாலையின் எதிர்புறம் முற்றிலும் தெரியாது. அதேவேளையில், நான் ஹெல்மேட் மற்றும் முகத்திற்கு மாஸ்க் அணிவதால், மூச்சுவிடுவதற்கும் சிரமம் ஏற்படுகிறது. அதேவேளையில், கரும்புகையை சுவாசிப்பதனால் இருமல் போன்ற பிரச்சனைகளையும் நான் சந்திக்கிறேன்," எனக் கூறினார். 

"ஹைட்ரோ கார்பனை சுவாசிப்பதன் மூலம் சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. மேலும், சுவாசப் பாதையில் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்," என்கிறார் தனியார் மருத்துவமனை மருத்துவர் கல்பனா.

கோவை டி.என்.எஸ்.டி.சி.,யின் பொது மேலாளர் கோவிந்தராஜ் பேசியதாவது:- பேருந்துகளில் இருந்து வெளியாகும் கரும்புகைக்கு ஓட்டுநர்களே காரணம். ஏனெனில், பேருந்தை இயக்க ஆரம்பிக்கும் போதோ அல்லது போக்குவரத்து நெரிசல்களின் போதோ அவர்கள் முழு ஆக்சலேட்டரையும் அழுத்துகின்றனர். ஆகவே, நாங்கள் முழு ஆக்சலேட்டரையும் அழுத்த வேண்டாம் என ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அதேவேளையில், ஃபில்டர் பம்ப்ஸ் கோளாறு ஏற்பட்டுள்ள பேருந்துகளுக்கு உடனடியாக உதிரி பாகங்கள் மாற்றி வருகிறோம், என்றார். மேலும், கோவைக்கு வரவேண்டிய புதிய பேருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் கூறினார். 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...