திருப்பூர்: வரும் ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுவதாக கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று முதலமைச்சர் எடப்பாடி.பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதில் இருந்து அத்தியாவசிய பொருட்களான பால், எண்ணெய் மற்றும் மருந்து பொருட்களுக்கு மட்டும் விளக்கு அளிக்கப்படுகிறது.

இந்த சூழலில், மற்ற அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களையும் மொத்தமாக தடை செய்வது என்பது திருப்பூர் ஏற்றுமதி தொழிலையே அழித்துவிடும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் ராஜா எம்.சண்முகம் கூறுகையில், "தடை செய்யப்பட பிளாஸ்டி பொருட்களில் பிளாஸ்டிக் பைகள், பேக்கிங் பைகள் இடம்பெற்றுள்ளது. ஏற்றுமதிக்காகவும், சில்லறை வணிகத்திற்கும் துணிகளை பிளாஸ்டிக் பைகளில் (பேக்கிங்) வைத்து தான் அனுப்ப வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசு பொதுவாக அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்துள்ளது. இதனால் பிளாஸ்டிக் பேக்கிங் மூலம் துணிகளை பாதுகாப்பது பாதிக்கப்படும். மேலும், நாங்கள் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது.
எங்களிடம் இருந்து துணிகளை வாங்குவோரும், இது போன்ற பிளாஸ்டிக் பைகளில் துணிகளை பாதுகாப்பதையே விரும்புகின்றனர்." என்றார்.
இது தொடர்பாக, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் தமிழக முதலமைச்சருக்கு மனு ஒன்றை அளித்திருப்பதும், இந்த பிளாஸ்டிக் பைகளுக்கு விளக்கு அளிக்கக் கோரியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.