கோவை: சுந்தராபுரம் பகுதியில் அதிவேகமாகச் சென்ற சொகுசு கார் நிலை தடுமாறி சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதியதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: சுந்தராபுரம் பகுதியில் அதிவேகமாகச் சென்ற சொகுசு கார் நிலை தடுமாறி சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதியதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை-பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள சுந்தராபுரம் பகுதியில் ஆட்டோ ஸ்டேண்ட் ஒன்று உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் அப்பகுதியில் இன்று பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி சொகுசு கார் ஒன்று அதிவேகமாகச் சென்றது.

அப்போது நிலை தடுமாறிய அந்த கார், எதிர்பாராத விதமாக ஆட்டோ ஸ்டேண்ட்-க்குள் புகுந்தது. நாராயணன் (70), அம்சவேணி (34), சுபாஷினி (18) என்ற கல்லூரி மாணவி, குப்பாத்தாள் (70), ஸ்ரீ ரங்கதாஸ் (69), ஆகிய ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்கள் மற்றும் பலியானவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சூழலில், விபத்தை ஏற்படுத்திய கார் ரத்தினம் கல்வி நிறுவனங்களின் உரிமையாளருக்கு சொந்தமானது என்பதும், அந்த காரை ஜெகதீசன் (38) என்பவர் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. ஜெகதீசனுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ள காரணத்தால், அவர் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் குடிபோதையில் வாகனம் இயக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், ஜெகதீசனின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளது என்றும், அவர் குடிபோதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பான செய்திகளுக்கு..
சுந்தராபுரம் பகுதியில் கார் மோதி ஆறு பேர் பலி: ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல்
சுந்தராபுரம் பகுதியில் சொகுசு கார் மோதி விபத்து : சாலையோரம் நின்ற 6 பேர் பலி
சுந்தராபுரம் விபத்து : நேரில் பார்த்தவர்கள் என்ன கூறுகிறார்கள்?
சுந்தராபுரம் பகுதியில் கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி: சி.சி.டி.வி., கட்சிகள் வெளியீடு
ஆறு பேர் மரணத்திற்கு காரணமான டிரைவரை வெளுத்து வாங்கிய கோவை மக்கள்