சுந்தராபுரம் பகுதியில் சொகுசு கார் மோதி விபத்து : சாலையோரம் நின்ற 6 பேர் பலி

கோவை: சுந்தராபுரம் பகுதியில் அதிவேகமாகச் சென்ற சொகுசு கார் நிலை தடுமாறி சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதியதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: சுந்தராபுரம் பகுதியில் அதிவேகமாகச் சென்ற சொகுசு கார் நிலை தடுமாறி சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதியதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை-பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள சுந்தராபுரம் பகுதியில் ஆட்டோ ஸ்டேண்ட் ஒன்று உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் அப்பகுதியில் இன்று  பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி சொகுசு கார் ஒன்று அதிவேகமாகச் சென்றது.



அப்போது நிலை தடுமாறிய அந்த கார், எதிர்பாராத விதமாக ஆட்டோ ஸ்டேண்ட்-க்குள் புகுந்தது. நாராயணன் (70), அம்சவேணி (34), சுபாஷினி (18) என்ற கல்லூரி மாணவி, குப்பாத்தாள் (70), ஸ்ரீ ரங்கதாஸ் (69), ஆகிய ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.



இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்கள் மற்றும் பலியானவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், விபத்து தொடர்பாக  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



இந்த சூழலில், விபத்தை ஏற்படுத்திய கார் ரத்தினம் கல்வி நிறுவனங்களின் உரிமையாளருக்கு சொந்தமானது என்பதும், அந்த காரை ஜெகதீசன் (38) என்பவர் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. ஜெகதீசனுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ள காரணத்தால், அவர் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் குடிபோதையில் வாகனம் இயக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், ஜெகதீசனின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளது என்றும், அவர் குடிபோதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.



மேலும், இது தொடர்பான செய்திகளுக்கு..

சுந்தராபுரம் பகுதியில் கார் மோதி ஆறு பேர் பலி: ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் 

சுந்தராபுரம் பகுதியில் சொகுசு கார் மோதி விபத்து : சாலையோரம் நின்ற 6 பேர் பலி

சுந்தராபுரம் விபத்து : நேரில் பார்த்தவர்கள் என்ன கூறுகிறார்கள்?

சுந்தராபுரம் பகுதியில் கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி: சி.சி.டி.வி., கட்சிகள் வெளியீடு

ஆறு பேர் மரணத்திற்கு காரணமான டிரைவரை வெளுத்து வாங்கிய கோவை மக்கள்

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...