உதகை காந்தி மைதானத்தில் குவிந்து கிடக்கும் கழிவுகள்: விளையாட்டு வீரர்கள் வேதனை

நீலகிரி: உதகை காந்தி மைதானத்தில் குவியும் குப்பைகளால் அங்கு செல்லும் விளையாட்டு வீரர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

நீலகிரி:  உதகை காந்தி மைதானத்தில் குவியும் குப்பைகளால் அங்கு செல்லும் விளையாட்டு வீரர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சொந்தமான பள்ளி விளையாட்டு மைதானம் ஏ.டி.சி.,யில் உள்ளது. இந்த மைதானத்தை பல பள்ளிகளின் மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.



சமீபத்தில் இந்த மைதானம் சீரமைக்கப்பட்டு, புதிய 'கேட்' அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கோடை சீசன் சமயத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்த மைதானத்தை 'பார்க்கிங்' தளமாக மாற்றியதால், குண்டும் குழியுமாக மாறியது.

தற்போது, கோடப்பமந்து கால்வாயில் அகற்றப்பட்ட சகதிகள் இந்த மைதானத்தில் ஆங்காங்கே கொட்டப்பட்டு, திறந்த வெளி கழிப்பிடமாகவும், குப்பை மேடாகவும் மாறி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.



மேலும், இரவில் இங்கு தங்கும் மக்களாலும், இப்பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், பள்ளி மாணவர்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் பயிற்சி மேற்கொள்ள வரும் விளையாட்டு வீரர்கள் இந்த மைதானத்தின் அவல நிலையைப் பார்த்து வேதனை அடைந்துள்ளனர்.

இந்த மைதானத்தை உடனடியாக தூய்மைப்படுத்தி முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...