தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து இன்னும் சற்று நேரத்தில் அறிக்கையை காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட உள்ள நிலையில், சென்னையில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு இரு தினங்களுக்கு முன்பு, உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து இன்று இரவு 9 மணியளவில் காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உடல்நிலையில் மூன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது, தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும், இதயத்துடிப்பு, சுவாசக்கோளாறு மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் குறைவு போன்ற காரணங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். இதனிடையே, சென்னையில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சேலத்தில் நாளை நடைபெறவிருந்த அரசு நிகர்ச்சியை ரத்து செய்து, சென்னை புறப்பட்டார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.