லாரி ஸ்டிரைக்கால் ரூ. 1.25 கோடியை வருமானம் ஈட்டிய சேலம் தெற்கு ரயில்வே

கோவை: நாடு முழுவதும் நடைபெற்ற லாரிகள் வேலைநிறுத்தத்தால், சரக்குகளைப் போக்குரவத்தில் மட்டும் சேலம் தெற்கு ரயில்வே துறை ரூ. 1.25 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது.


கோவை: நாடு முழுவதும் நடைபெற்ற லாரிகள் வேலைநிறுத்தத்தால், சரக்குகளைப் போக்குரவத்தில் மட்டும் சேலம் தெற்கு ரயில்வே துறை ரூ. 1.25 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது. 

டீசல் விலை உயர்வு, சுங்க வரிக் கட்டணம் உள்ளிட்டவற்றை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 8 நாட்களாக நடைபெற்ற இப்போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது. ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தினால் விளை பொருட்களை விற்பனைக்காகப் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லமுடியாமல் விவசாயிகள் திணறினர். இதேபோல, டெக்ஸ்டைல், உரங்கள், ஆட்டோமொபைல் உபகரணங்கள் மற்றும் பல்வேறு தொழில்களும் கடுமையாக முடங்கியது. 



இதனிடையே, விவசாயிகள் பாதிக்கப்படாதவாறு பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம், காய்கறிகளைப் பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்லலாம் என அரசு அறிவித்திருந்தது. இருப்பினும், அதில், அதிகளவு இடர்பாடுகள் இருந்ததால், பெரும்பாலான விவசாயிகள் ரயில் மார்க்கமான போக்குவரத்தை நாடினர். 

இதற்காக, சேலம் ரயில்வே கோட்டத்தில் மட்டும், கோவை, மேட்டுப்பாளையம், சேலம், திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு ரயில்நிலையங்களில் மொத்தம் 32 பார்சல் முன்பதிவு மையங்கள் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டன. ரயில்நிலையங்களில் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களின் சரக்குகளை, ரயில்களில் ஏற்றும் செலவுகளை ரயில்வே நிர்வாகம் இலவசமாக செய்து கொடுத்தது. 

லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற்ற இந்த 8 நாட்களில் மட்டும் சேலம் தெற்கு ரயில்வேத்துறைக்கு ரூ. 1,25,44,443 வருமானம் கிடைத்துள்ளது. இது குறித்து ரயில்வே மூத்த அதிகாரி கூறியதாவது :- கடந்த 18-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ரூ. 1,25,44,443 வருமானம் கிடைத்துள்ளது. 3.191.5 டன் எடையுள்ள சரக்குகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 



இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், 158.45 சதவீதம் அதிகமாகும். 2017-ம் ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ. 48,53,737 வருமானமும், 1,313.4 டன் சரக்குகளும் கொண்டு செல்லப்பட்டுள்ளன," இவ்வாறு அவர் கூறினார். 

லாரிகளின் வேலைநிறுத்தத்தினால் சரக்குப் போக்குவரத்திற்காக சிறப்பு ரயிலை சேலம் தெற்கு ரயில்வே இயக்கியது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...