கோவை : மனிதர்களின் அத்துமீறிய செயல்களால் கோவை சிங்காநல்லூர் குளத்தில் இருந்து பிற குளங்களுக்கு விரட்டியடிக்கப்படும் சம்பவம் பறவைகள் ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகக் கோவையில் பெய்த தென்மேற்கு பருவமழையினால் சிங்காநல்லூர் குளம் நிரம்பி வழிகிறது. இதனால், பறவைகள் வரத்து குறைந்து, ஒரு பாலைவனம் போல அந்தக் குளம் காட்சியளிக்கிறது. பொதுவாக பறவை இனங்கள் அதிகளவு காணப்படும் இடமாக கோவை சிங்காநல்லூர் குளம் திகழ்ந்து வந்தது. அங்கிருந்து பறந்து செல்லும் சில பறவைகளினால் வாலாங்குளத்தில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சிங்காநல்லூர் குளத்தில் பறவைகள் குறைந்து காணப்படுவதற்கு சட்டவிரோதமாக அங்கு மீன்பிடிக்கும் பணிகளே காரணம் என தகவல்கள் கூறுகின்றன. மீனவர்கள் நீண்ட குச்சிகளை வைத்து நீரில் அடித்து மீன்களைப் பிடிப்பது, குளத்தில் இருக்கும் உணவுகளைப் பறவைகள் எடுப்பதற்கு வழியில்லாமல், குளம் முழுவதும் வலைகளை பரவச் செய்திருப்பது போன்ற அத்துமீறிய செயல்களில் ஈடுபடுகின்றனர். மனிதர்களின் இது போன்ற நடவடிக்கைகளினால் பறவைகள் உணவுக்காக சிங்காநல்லூர் குளத்தை தவிர்த்து, வாலாங்குளத்தை நோக்கி படையெடுக்கின்றனர்.

இதனிடையே, குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பினாலும், மரங்கள் மற்றும் மூட்டைகளால் குளம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது போன்ற காரணங்களால் சிங்காநல்லூர் குளத்தில் பறவைகள் குறைந்து காணப்படுவதற்கான காரணம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.