மின்வாரியம் 3 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பில் செயல்படுகிறது - அமைச்சர் தங்கமணி

திருப்பூர்: திருப்பூரில் கோவை மண்டல மின்வாரிய அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை.ராதாகிருஷ்ணன், மின்வாரியம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருப்பூர்: திருப்பூரில் கோவை மண்டல மின்வாரிய அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை.ராதாகிருஷ்ணன், மின்வாரியம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் கலந்துகொண்டனர். 

ஆய்வுக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, "மின்வாரியத்தில் கடந்த காலங்களில் 14 ஆயிரம் கோடி நஷ்டம் என்பது தற்போது 3 ஆயிரம் கோடியாக உள்ளது.



விரைவில் லாபமூட்டக்கூடிய வகையில் செயல்படும். டவர் லைன் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அவர்களுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி அதன் பிறகே செயல்படுத்தப்படும்.

கொள்கை ரீதியில் எதிர்க்கட்சியானாலும், அரசியல் நாகரீகம் கருதி கலைஞரைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தோம். தமிழகத்தில் 6,718 மதுபானக் கடைகள் இருந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வருடம் 500 கடைகளை அடைப்போம் என்று வாக்குறுதி அளித்தார்.

தற்போது 3,886 மதுபானக் கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. கடந்தாண்டு விவசாயிகளுக்கு தட்கல் முறையில் 9,946 வழங்கக் கூடிய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின்சார வாரியம் வெளிப்படைத்தன்மையோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது." என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...