வால்பாறையில் ரேசன் கடையை சேதப்படுத்திய காட்டு யானைகள்; வனவிலங்குகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதி

வால்பாறை: வால்பாறை அருகே கோவில் மற்றும் ரேசன் கடையை சேதப்படுத்திய காட்டு யானைகளால் அங்குள்ள பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

வால்பாறை: வால்பாறை அருகே கோவில் மற்றும் ரேசன் கடையை சேதப்படுத்திய காட்டு யானைகளால் அங்குள்ள பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். 



வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை, யானை போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளது. இதனால், மனித - விலங்குகளின் மோதல் அதிகளவில் ஏற்படுகிறது. எனவே, அப்பகுதி மக்கள் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், வால்பாறை அருகே உள்ள மாணிக்கா எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்துள்ளன. அங்குள்ள கோவில் கதவை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தின. தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை சேதப்படுத்திய காட்டு யானைகள், டீ கடையை உடைத்து, உள்ளே இருந்த பொருட்களை நாசமாக்கின. 



பின்னர், மாணிக்கா எஸ்டேட் ரேசன் கடையை உடைத்து, ஒரு மூட்டை பருப்பை தின்று பசியாற்றிக் கொண்டன. அதோடு, மாணிக்கா எஸ்டேட் மஸ்ட்ரூல் கதவு, ஜன்னல்களை உடைத்தன. இதைத் தொடர்ந்து, எஸ்டேட் பொதுமக்கள் ஒன்றுகூடி, காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர். 



இதேபோல, பன்னிமேடு எஸ்டேட், காஞ்சமலை எஸ்டேட், சின்கோனா எஸ்டேட், பாரளை எஸ்டேட் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால், பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு கொடுத்து, காட்டு யானையைக் காட்டுக்குள் விரட்ட வனத்துறையினருக்கு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...