சிறுத்தை தாக்கி இருவர் காயம் : ஊட்டி அருகே கூண்டு வைத்தது வனத்துறை

நீலகிரி: ஊட்டி அருகே தேயிலை தோட்டத்தில் பதுங்கிய சிறுத்தை, இருவரை தாக்கியதால் மக்கள் பீதி அடைந்தனர்.

நீலகிரி: ஊட்டி அருகே தேயிலை தோட்டத்தில் பதுங்கிய சிறுத்தை, இருவரை தாக்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். 

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே துானேரி கிராமம் உள்ளது. இங்குள்ள தேயிலை தோட்டங்களில், பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த பீமன் என்பவர், அறுவடைக்கு தயாரான இலையை பறிக்க, தேவாலா பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள், ஆறு பேரை அழைத்து வந்து இலை பறிக்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.



நேற்று (ஜூலை 25-ம்) மதியம், 1 மணியளவில் வேல்முருகன் (38) என்பவர் இலை பறித்து கொண்டிருந்தபோது, தேயிலை செடிகளுக்கு இடையே மறைந்திருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து, அவரை தாக்கியது. இதில் அவருக்கு நெற்றி மற்றும் இடது கையில் காயம் ஏற்பட்டது.

வேல்முருகனின் அலறல் சப்தத்தை கேட்டு, அருகில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓடி வந்தனர். அதற்குள் சிறுத்தை ஓடியது. பலத்த காயமடைந்த வேல்முருகனை, துானேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று, முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின், மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, உதவி வன பாதுகாவலர் சரவணன் தலைமையில், வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியை ஆய்வு செய்தனர்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை, வனத்துறை ஊழியர் திருமூர்த்தி, (45) என்பவரை தாக்கியது. இதில் அவரது தலை, முதுகில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவருக்கு, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.



தற்போது அந்த பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க அந்த பகுதியில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "இந்த பகுதியிலுள்ள விவசாய நிலங்களை வனவிலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்." என்றனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக நீலகிரி மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் கூறுகையில், ''சம்பவம் நடந்த இடத்தில், ஒரு கூண்டு வைக்கப்பட்டு, சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை.'' என்றார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...