நீலகிரி : உதகையை அடுத்த தூனேரி கிராமத்தில் சிறுத்தை தாக்கி ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் உள்ளூர் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியில் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், மாவட்டத்தில் பல பகுதிகளில் தண்ணீர் மற்றும் உணவு தேடி கிராமப்புற பகுதிகளுக்கு வரும் வனவிலங்குகள் அவ்வப்போது மனிதர்களை தாக்கி வருகிறது. இதனால், சில மனித உயிர்களும் பலியாகி வருவது வாடிக்கையாகவே உள்ளது.
இந்நிலையில், கூடலூர், தேவலா பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (38). இவர் தற்போது உதகையை அடுத்த தூனேரி கிராமத்தில் தங்கி தனியார் தேயிலை எஸ்டேட்டில் இலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். வழக்கம்போல, அவர் இன்று தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த போது, சிறுத்தை ஒன்று அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியினர் மீட்டு உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.