திருப்பூர்: திருப்பூரில் வெளிநாட்டிற்குச் சுற்றுலா செல்வதாக பலரிடம் சேர்த்து ரூ. 27 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் குமரன் சாலையில் 'காக்ஸ் அன் கிங்டம்' என்னும் டூரிஸ்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் வெளிநாடு சுற்றுலா செல்ல விரும்புபவர்களை பேக்கேஜ் முறையில் அழைத்து செல்லப்படுவர். இதில், பெரம்பலூரைச் சேர்ந்த மோகன் என்பவர் மேலாளராகப் பணி புரிந்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்காக வாடிக்கையாளர்கள் பேக்கேஜ் டீல் முறையில் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், குறித்த தேதியில் அழைத்து செல்லவில்லை.
இது தொடர்பாக மேலாளர் மோகனை தொடர்பு கொண்ட போது, போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. நிறுவனமும் பூட்டியே கிடந்தது. அதன்பின் கோவை அலுவலகத்தில் புகார் செய்து, அவர்கள் விசாரணை மேற்கொண்ட போது போலியான புக் மூலம் ரூ. 27 லட்சம் கையாடல் செய்தது தெரிய வந்தது. பின்னர், கோவை அலுவலக மேலாளர் ஐசக் சாமுவேல், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் விசாரணை செய்த போலீசார் தலைமறைவாக இருந்த மோகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.