இந்து அமைப்புகள் ஏன் சமையலர் பாப்பாள் விவகாரத்தில் தலையிடவில்லை..? அர்ஜுன் சம்பத்தின் பதில்

திருப்பூர்: அவினாசியில் நிகழ்ந்த தீண்டாமை சம்பவத்தில் இந்து அமைப்புகள் தலையிடாததற்கான காரணத்தை இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: அவினாசியில் நிகழ்ந்த தீண்டாமை சம்பவத்தில் இந்து அமைப்புகள் தலையிடாததற்கான காரணத்தை இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். 

அவிநாசியை அடுத்த திருமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் சமையலராக அதேப் பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் (42) என்பவர் கடந்த 16-ம் தேதி பணியிட மாற்றம் பெற்றார். இதையறிந்த மற்ற சமூகத்தினர், அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பாப்பாள் சமையல் செய்தால் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக் கூறி, பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்றனர். மேலும், இவர்களது புகாரால் பாப்பாளை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்து வட்டார வளர்ச்சி அதிகாரி உத்தரவிட்டார். 

இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பாப்பாளுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிராக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், "பாப்பாளுக்கு நிகழ்ந்த சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நாங்கள் அவருக்கு உதவ விரும்புகிறோம். ஆனால், சில தலித் கட்சிகள் வேண்டுமென்றே, அதனை தடுக்கின்றன. மேலும், இந்து கட்சிகள் அனைத்தும் தலித்துகளுக்கு ஆதரவாக இல்லை என்பது போன்று அவர்கள் சித்தரித்துவிட்டனர்," இவ்வாறு அவர் கூறினார். 

மேலும், கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. சாதி வன்கொடுயை தடுப்பதில் அண்ணா, பெரியார் ஆகியோர் தோல்வியடைந்துவிட்டனர். ஏனெனில், சமத்துவத்தை முழுமையாக பரவச் செய்யாததே இதற்கு காரணம் என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். 

இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட்டால், பிரச்சனை பெரிதாகிவிடும் எனக் கருதி, காவல்துறையினர் பாப்பாள் விவகாரத்தில் தலையிட வேண்டாம் எனக் கூறியதாக அவர் கூறினார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...