நீலகிரியில் அபாயகரமான மரங்களை அகற்ற உத்தரவு: மரம் விழுந்து மக்கள் பலியாவதை தடுக்க நடவடிக்கை

நீலகிரி: பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


நீலகிரி: பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கூடலூர், குந்தா, பந்தலூர், அப்பர் பவானி, தேவாலா, உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலையோரங்களில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.



இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக உதகை, கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பிங்கர் போஸ்ட் பகுதியில் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில் 18 வயது இளைஞர் உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சாலையோரங்களில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். 

இதனையடுத்து, சாலையோரங்கள், பள்ளி, கல்லூரிகள், குடியிருப்பு பகுதிகள் என பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் உள்ள அபாயகரமான மரங்களைக் கணக்கெடுக்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.



மாவட்டம் முழுவதும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள அபாயகரமான மரங்கள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் துரிதகதியில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது உதகை, குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றது.



இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், "நீலகிரியில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால், மேலும் எந்தவித அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் தற்போது போர்க்கால அடிப்படையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது." என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...