சேலம்: தொடர் கனமழையின் காரணமாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம்: தொடர் கனமழையின் காரணமாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் கனமழை மற்றும் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பினால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை தனது முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதனால், மேட்டூர் அணையில் இருந்து 12 மணி முதல் 40,000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பை கருதி கூடுதலாக 10,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68,489 கனஅடி, அணையில் இருந்து இருந்து நீர்திறப்பு 30,000 கனஅடியாக தற்போது உள்ளது. மேலும், மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு 92.53 டி.எம்.சி.யாக உள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையம் வழியாக உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 16 கண் பாலம் வழியாக கிழக்கு - மேற்கு கால்வாயில் 200 கனஅடியும் என மொத்தம் 30,200 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதிகளவு உபரிநீர் திறக்கப்படுவதால், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு உள்பட 12 மாவட்ட ஆட்சியர்கள் மூலம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.