மாணவி உயிரிழந்த விவகாரம்: போலி பயிற்சியாளருக்கு சான்றிதழ் தயாரித்து கொடுத்தவர் கைது

கோவை: கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் கல்லூரி மாணவி இறந்த விவகாரம் தொடர்பாக, போலி பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு சான்றிதழ் தயாரித்துக் கொடுத்த யோகானந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் கல்லூரி மாணவி இறந்த விவகாரம் தொடர்பாக, போலி பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு சான்றிதழ் தயாரித்துக் கொடுத்த யோகானந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர். 

கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரி (18) உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஆலாந்துறை போலீசார் ஆறுமுகம் மீது உயிரிழப்பு ஏற்படும் என தெரிந்தும் மரணம் விளைவித்தல் பிரிவில் 304-ல் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து ஆறுமுகம் வைத்திருந்த போலிச்சான்றிதழ் தொடர்பாகவும், அவருடைய பின்னணி குறித்து அறிய ஆலாந்துறை போலீசார் அவரை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். மேலும் அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று அவருடைய அலுவலகம் மற்றும் வீட்டில் சோதனையிட்டதில் கட்டுக்கட்டாக போலி சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகள், போலியாக தயாரித்த சீல்டுகள் இரண்டு கணினி மற்றும் பிரிண்டர்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆறுமுகத்திற்கு போலி சான்றிதழ் தயாரித்துக் கொடுத்த சிவகாசியைச் சேர்ந்த யோகானந்த் (49) என்பவரை ஆலாந்துறை போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் ஆறுமுகத்திற்கு போலி சான்றிதழ் அச்சடித்துக் கொடுத்ததும், கடந்த 5 ஆண்டுகளாக போலி சான்றிதழ் வழங்கியதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்திய போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...