நீலகிரி: ஆண்டுதோறும் நல்ல மழை பொழிவைப் பெறும் நீலகிரி மாவட்டத்தில் தடுப்பணை கட்டினால், நீண்ட ஆண்டுகளாக இழுபறியில் இருக்கும் அவினாசி - அத்திக்கடவு திட்டம் சாத்தியப்படுமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் தமிழகத்தின் தண்ணீர் தொட்டி என்றழைக்கப்படுகிறது. சமவெளியில் பாயும் நதிகளில் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்டம் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் மாயார் மற்றும் பவானி ஆகிய இரு ஆறுகளும் கோவை, ஈரோடு மாவட்டங்களில் குடிநீர் மற்றும் பாசன தேவையைப் பூர்த்தி செய்து, காவிரியுடன் கலந்து டெல்டா மாவட்டங்களை சென்றடைகின்றன.
ஆண்டுக்கு 1.269 மி.மீ., மழை:
நீலகிரி மாவட்டத்தில் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் தென்மேற்கு பருவ மழை சராசரியாக ஆண்டுக்கு 655 மி.மீ., மழை பதிவாகும். ஜூனில் 172 மி.மீ., ஜூலையில் 212 மி.மீ., ஆகஸ்ட்டில் 135 மி.மீ., மற்றும் செப்டம்பரில் 136 மி.மீ., அளவு மழை பெய்யும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழை சராசரியாக 614 மி.மீ., பதிவாகும். நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழை பெரும்பாலும் மின் உற்பத்தி மற்றும் குடிநீர் தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

மின் உற்பத்தி:
நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா புனல் நீர்மின் திட்டத்தின் கீழ் உள்ள 12 மின் நிலையங்கள் மூலம் 833.77 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், நீலகிரி மாவட்டத்துக்கு 70 மெகாவாட் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள மின்சாரம் ஈரோடு கிரீட்க்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள எமரால்டு, முக்கூர்த்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மாயார், பார்சன்ஸ் வேலி, போர்த்திமந்து, அவலாஞ்சி, குந்தா, கெத்தை, அப்பர்பவானி அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த அணைகளில் தேக்கி வைக்கப்படும் சுமார் 11 ஆயிரத்து 715 க்யூசெக்சஸ் (Cusecs) நீர், ராட்சத குழாய்கள் மூலம் குந்தா மின் நிலையம் கொண்டு வரப்பட்டு, மின் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்திக்குப் பிறகு வெளியேறும் நீர், குந்தா அணை சுரங்கப் பாதை வழியாக 16 கி.மீ தூரத்தில் உள்ள கெத்தை மின் நிலையம் கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதே முறையில் பரளி, பில்லூர் மின் நிலையங்களும் இயங்குகின்றன. மின் உற்பத்திக்கு முக்கிய அணையான அப்பர் பவானி அணையிலிருந்து வெளியேற்றும் நீர், குழாய்கள் மூலம் மீண்டும் அணைக்கு கொண்டு வரப்படுவது சிறப்பம்சமாகும்.
இந்த அனைத்து அணைகளும் ஒன்றோடு ஒன்று ஒன்றிணைந்துள்ளதால், மாவட்டத்தில் சேகரிக்கும் நீர், வீணாகாமல் மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது. பின்னர், உபரி நீர் பில்லூர் அணை மூலம் சமவெளிப்பகுதிக்கு வெளியேற்றப்படுகிறது. அந்த நீர், பவானி ஆற்றில் கலந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையை அடைகிறது.
குடிநீர் பயன்பாடு:
மின் உற்பத்திக்குப் பயன்படும் அணைகளில் ஒன்றான பார்சன்ஸ் வேலி அணையிலிருந்து உதகை நகரம் மற்றும் வெலிங்டன் ராணுவ மையத்தின் குடிநீர் தேவைக்கு தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குன்னூர் நகரத்தின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய எமரால்டு அணையிலிருந்து குடிநீர் வழங்க புதிய திட்டம் ஒன்றை அறிவித்தார். தமிழ்நாடு வடிகால் வாரியம் மூலம் எமரால்டு அணையிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரம் குன்னூர் வரை குழாய்கள் அமைத்து, தினமும் 116 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் குன்னூர் நகராட்சி, முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி மற்றும் பாஸ்டியர் ஆய்வகமும் பயன்பெறும். இத்திட்டம் 7 ஆண்டுகளாக கடும் இழுபறியில் நடந்து வருகிறது.
பாண்டியாறு - புன்னம்புழா திட்டம்:
நீலகிரி மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் பெய்யும் மழை நீர் கேரளாவுக்கும், கபனி ஆற்றில் கலந்து கர்நாடகாவுக்கும் செல்கிறது. கூடலூர் அருகேயுள்ள தேவாலா இரண்டாம் சிரம்புஞ்சி என்றழைக்கப்படுகிறது. ஆண்டுக்கு சராசரியாக 7,000 மி.மீ., மழைப் பொழிவை பெறுகிறது. இங்கு உற்பத்தி ஆகும் பாண்டியாறுக்கு நீர் ஆதாரமாக இருப்பது தேவாலா, பந்தலூர் மற்றும் ஓவேலிப் பகுதிகள். பாண்டியாறு மேற்கு நோக்கி சென்று கேரளாவில் உள்ள சாலியாற்றில் கலந்து நிலம்பூர் வழியாக கள்ளிக்கோட்டைக்கு அருகில் கடலில் கலந்து வருகிறது.
தமிழகத்தில் உருவாகி கேரள மாநிலக் கடலில் கலக்கும் பாண்டியாற்றை நாம் முறையாக பயன்படுத்திருந்தால், தமிழகத்திற்கு தேவையான நீர் ஆதாரம் மேம்பட்டிருக்கும் என்கின்றனர் தமிழ்நாடு மின்சார வாரியத்தினர்.
மின் வாரிய அதிகாரிகள் கூறும் போது :- 1967-ம் ஆண்டில் கேரள அரசுடன் இணைந்து போடப்பட்ட பாண்டியாறு - புன்னம்புழா நீர்த்தேக்கத் திட்டம் வனச்சூழல் மற்றும் கேரள அரசின் எதிர்ப்பு காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. வீணாகக் கடலில் கலக்கும் நீரை தமிழகத்திற்கு திருப்பினால் விலங்குகளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்கும். நீராதாரம் மட்டும் இன்றி மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பும் இருப்பதால் இரு மாநிலங்களும் பயன்பெறும், இவ்வாறு கூறுகின்றனர்.

அவினாசி - அத்திக்கடவு திட்டத்திற்கு அடித்தளமா..?
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் செ.நல்லசாமி கூறுகையில், "தமிழ்நாடு கேரள எல்லையில் தடுப்பணை கட்டி கிழக்கு நோக்கி திருப்பினால், தமிழகத்திற்கு 14 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கும். இந்த தண்ணீரைக் கொண்டு எளிதாக அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்ற முடியும். பண்டியாறு-புன்னம்புழா நீர் பவானி பாசனங்களின் நீர் பற்றாக்குறையைப் போக்கும். காவிரி கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கும், காவிரி டெல்டா பாசனங்களுக்கும் கூடுதலான வளம் சேர்க்கும். வீராணம் ஏரிக்குச் சென்று சென்னைக்கு குடிநீராகவும் செல்லும்," என்றார்.
இந்நிலையில், கூடலூர், பந்தலூரிலிருந்து கர்நாடகாவுக்கு பாயும் தண்ணீரை தடுத்து, தமிழக எல்லையில் அணை கட்ட முடியுமா..? என பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
வாட்ஸ் ஆப் செய்தி - எதிர்ப்பு
கூடலூரில் உற்பத்தியாகி மாவட்டத்தின் வடக்கு பகுதியான முதுமலை சுற்று வட்டாரப்பகுதிகளில் பாயும் மாயாறு, பவானி சாகர் அணையை அடைகிறது. இந்த ஆறு அடர்ந்த வனப்பகுதியில் பயணித்து பவானிசாகரை அடைகிறது. இந்நிலையில், சமீப காலமாக வாட்ஸ் ஆப்பில் ‘மாயாற்றின் குறுக்கே அணை கட்டினால் கர்நாடகாவை நம்பியிருக்கத் தேவையில்லை’ என செய்தி பரவலாகப் பரவி வருகிறது. இதற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக பசுமை இயக்க இணைச்செயலாளர் எஸ்.ஜெயசந்திரன் கூறும்போது :- பவானியின் கிளை ஆறான மாயாறு, நீலகிரி மாவட்டத்தின் உள்ளே அடர்ந்த வனத்தில் மாயாறு பள்ளத்தாக்கில் பாய்ந்து பவானி சாகர் அணையை அடைகிறது. இந்த ஆறு கர்நாடகா சென்று மீண்டும் தமிழகத்துக்கு திரும்புவதில்லை. இங்கு அணை கட்ட சாத்தியக்கூறுகள் இல்லை, என்றார்.