8 வழிச்சாலைத் திட்டம் மக்களுக்கானதாகவே இருக்க வேண்டும் : உதகையில் நல்லசாமி பேட்டி

நீலகிரி : சேலம் முதல் சென்னை வரை கொண்டு வரப்பட்டுள்ள 8 வழிச்சாலைத் திட்டம் மக்களுக்காகவே இருக்க வேண்டும் என உதகையில் தமிழ்நாடு விவசாயிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

நீலகிரி : சேலம் முதல் சென்னை வரை கொண்டு வரப்பட்டுள்ள 8 வழிச்சாலைத் திட்டம் மக்களுக்காகவே இருக்க வேண்டும் என உதகையில் தமிழ்நாடு விவசாயிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார். 

உதகையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- சேலம் முதல் சென்னை வரை கொண்டு வரப்பட்டுள்ள 8 வழிச்சாலை காலத்தின் கட்டாயமாகும். இந்தத் திட்டம் மக்களுக்காகவே இருக்க வேண்டும். அரசு மற்றும் துறை சார்ந்தவர்களின் ஆதாயமாக இருக்கக் கூடாது. 



நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உற்பத்தியாகும் நீர் வீணாக கேரளாவில் உள்ள அரபிக்கடலில் கலக்கிறது. இந்தத் தண்ணீரை பாண்டியாறு-புன்னம்பழம் ஆற்றில் குறுக்கே சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் தடுப்பு அணைகளை கட்டி, மீண்டும் மாயார் ஆற்றிற்கு திருப்பினால் டெல்டா விவசாயிகள் பயன் பெறுவர். மேலும், நீலகிரி மாவட்டத்தில் நிலத்தடி நீரை சேமிக்க வேண்டுமென்றால் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். இல்லையெனில், நாடு பாலைவனமாக மாறி விடும். இஸ்ரேல் போன்ற பாலைவன நாடுகளில் கூட ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடி நீரை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல, இந்தியாவிலும் நிலத்தடி நீரை எடுக்கப் படிப்படியாக தடை விதிக்க வேண்டும். 

கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் மேட்டூர் அணையில் தேங்கியிருந்தால் நடப்பாண்டில் குறுவை சாகுபடி சாத்தியமாயிருக்கும். குறுவை சாகுபடி செய்யாமல் போனது தீர்ப்பில் உள்ள மாதந்திர அடிப்படையில் என்ற அம்சம் தான். இந்த தீர்ப்பு திருத்தப்பட்டு தினந்தோறும் நீர் பங்கீடு என்று சட்டம் திருத்தி அமைக்க மாநில அரசு உடனடியாக மறு சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்," இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...