கோவை: கோவையில் கல்லூரி உதவி பேராசிரியரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (41). இவர் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியில் தனியாக வாடகைக்கு அறை எடுத்து தங்கி, சூலூரில் உள்ள ஆர்.வி.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இன்று இவரது அறையில் இருந்து அதிக துர்நாற்றம் வீசியது. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்தத் தகவலையடுத்து போலீசார் அவரது அறைக்குச் சென்று கதவை உடைத்துப் பார்த்தபோது, அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார். இதனையடுத்து, போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். திருமணமாகாத விஜயகுமாரின் தாய் சமீபத்தில் தான் இறந்துள்ளார். தாய் இறந்த துக்கத்தில் தற்கொலை செய்து கொண்டாரா..? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா..? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அவர் உயிரிழந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகியிருக்கும். அதனால், முற்றிலும் அழுகிய நிலையில் உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். கல்லூரி பேராசிரியர் இறந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது