உதகை மலைச்சாலையில் நிலச்சரிவைத் தடுக்கும் கருங்கல் அடுக்கு தடுப்புச்சுவர் : 10 ஆண்டுகளாகப் பாதுகாப்பான பயணம்

கோவை : உதகை - மேட்டுப்பாளையம் மலைச் சாலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்ட கருங்கல் அடுக்கு தடுப்புச்சுவரால், போக்குவரத்து பாதிப்பின்றி, வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை : உதகை - மேட்டுப்பாளையம் மலைச் சாலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்ட கருங்கல் அடுக்கு தடுப்புச்சுவரால், போக்குவரத்து பாதிப்பின்றி, வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

மேட்டுப்பாளையம் வழியே நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் உதகை சாலையில் கடந்த 2009-ம் ஆண்டு 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால், மூன்று மாதங்கள் வரை போக்குவரத்து முடக்கப்பட்டது. தொடர்மழை காரணமாக மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை மட்டுமே பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, பெரும் பாறைகள் உருண்டு சாலை துண்டிக்கப்பட்டது. 

அதேவேளையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியே உதகை செல்லும் மாற்றுச் சாலையிலும் நிலச்சரிவு ஏற்பட்டதால், கோவை மாவட்டத்தில் இருந்து நீலகிரிக்கு சாலை போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது. அப்போது, இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மத்திய ஆய்வுக்குழு, இச்சாலையோர மலைப்பகுதி மண் மற்றும் பாறைகள் போதிய பிடிமானத்தை இழந்து வருவதால், வரும் காலங்களிலும் இரு நாட்களுக்கு மேல் மழை தொடர்ந்தால் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கை விடுத்தது. 

இதனையடுத்து, மழைக்காலங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் இதற்கான எச்சரிக்கை அறிவிப்புகளும் வைக்கப்பட்டன. மேலும், அதே ஆண்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நிலச்சரிவு ஆபத்துள்ள இடங்களில் சாலையோரத்தில் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டன. இச்சுவர்கள் வழக்கமான சிமெண்ட், மணல் என கான்கிரீட்டால் எழுப்பப்படும் சுவர்களை போல அல்லாமல், மிக உறுதியான இரும்பு கம்பிகளால் ஆன பெரிய கூண்டு போன்ற அமைப்பை உருவாக்கி, அதனுள் பல்வேறு வடிவங்களில் உள்ள கருங்கற்கள் அடுக்கப்பட்டு சுவர்கள் கட்டப்பட்டன.



இம்முறையில் கட்டப்பட்டுள்ள இச்சுவர்களின் வழியே தண்ணீர் எளிதாக ஊடுருவி கடந்து செல்ல இயலும். நீருடன் வரும் மண் மற்றும் கற்கள் மட்டும் தடுத்து நிறுத்தப்படும். பத்தாண்டுகளுக்கு முன்பு இச்சுவர்கள் அமைக்கப்பட்டபோது, இவை போதிய பலனைத் தருமா..? நிலச்சரிவை தடுத்து நிறுத்துமா..? என்ற கேள்வி பலரது மனதில் எழுந்தது.

இந்த நிலையில், இன்று வரை பழமையான கூண்டு சுவர்கள் மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் ஏற்பட்டு வந்த மழைக்கால மண்சரிவுகளை கட்டுப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பருவமழை காலங்களில் நீலகிரி மாவட்ட பகுதிகளில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்ட நிலையிலும், மேட்டுப்பாளையம் உதகை சாலையில் மண் சரிவு ஏற்படவே இல்லை.என்பது அனைவரிடத்திலும் மகிழ்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...