பல்லடம் அருகே பெண் கழுத்தை நெரித்து கொலை : கொலையாளிக்கு போலீசார் வலைவீச்சு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அருகே இச்சிப்பட்டியில் சேகர் மற்றும் ரத்தினம் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த இவர்கள் துணி இஸ்திரி செய்யும் கடையை நடத்தி வந்தனர். இவர்களுடன் கோடங்கிபாளையம் பகுதியை சேர்ந்த ஜான்சன், மிக நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு ஜான்சன் வீட்டிற்கு ரத்தினம் (35) சென்றுள்ளார். இதனை அருகில் வசிப்பவர்கள் பார்த்துள்ளனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் ஜான்சனும், ரத்தினமும் வெளியே வரவில்லை. இதனால், அருகிலிருந்தவர்கள் சந்தேகத்தின் பேரில் சென்று பார்த்த போது, ரத்தினம் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதனைத் தொடர்ந்து, பல்லடம் போலீசாருக்கும், ரத்தினத்தின் கணவருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது- தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பல்லடம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இன்று அதிகாலை முதல் ஜான்சன் தலைமறைவானது தெரிய வந்தது. கொலைக்கான காரணம் குறித்தும், தலைமறைவான ஜான்சனை பற்றியும் பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...