கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்

கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தின் முன்பு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தின் முன்பு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டண உயர்வு, காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடவேண்டும், லாரிகளுக்கான மூன்றாம் நபர் காப்பீடு உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஜுலை 20) முதல் அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இதன் ஒரு பகுதியாக, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஆட்டோ தொழிலைப் பாதிக்கக்கூடிய வகையில் காப்பீடு கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்தும் கோவை தெற்கு தாலுகா அலுவகம் முன்பு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தின் போது, மத்திய அரசிற்கு எதிராகவும், பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.



Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...