கோவை: சுங்க வரி கட்டணம் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 2-வது நாளாக நீடிக்கிறது.

டீசல் விலை உயர்வு, சுங்க வரி கட்டனம் உயர்வு, இன்சூரன்ஸ் விலை உயர்வு போன்றவற்றை குறைக்கக் கோரியும், முறைப்படுத்த கோரியும் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பாக அழைக்கப்பட்டுள்ள இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம், கோவை லாரி உரிமையாளர் சங்கம் உள்பட 135 லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
முதல் நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பல கோடி ரூபாய் அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது நாளாக தொடரும் இந்தப் போராட்டம் காரணமாக தமிழகத்தில் சுமார் ரூ. 200 கோடி வரை வர்த்தக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.