கோவை: தடாகம் அருகே கடந்த இரண்டு நாட்களில் யானை தாக்கியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

தடாகத்தை அடுத்த வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் வீராச்சாமி (38). இன்று இவரது வீட்டருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டுயானை அவரைத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
இதே போல், சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்த மயிலாள் என்ற பெண்ணும் நேற்று காட்டு யானையால் தாக்கப்பட்டார். தற்போது அவர்கள் இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.