கோவையில் விற்பனையாகும் மீன்களில் வேதிப் பொருட்கள் கலந்துள்ளதா?: நவீன உபகரணங்கள் மூலம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

கோவை: உக்கடம் பகுதியில் உள்ள மீன் மார்கெட்டில் பார்மலின் செலுத்தி மீன்கள் பதப்படுத்தப்படுகிறதா? என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை: உக்கடம் பகுதியில் உள்ள மீன் மார்கெட்டில் பார்மலின் செலுத்தி மீன்கள் பதப்படுத்தப்படுகிறதா? என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். 

கேரளாவில் இருந்து கோவை வரும் மீன்களில் பார்மலின் என்ற வேதிப்பொருள் தெளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவின. தகவலின் அடிப்படையில், இன்று காலை உக்கடம் மீன் மார்க்கெட்-க்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்குள்ள 45 கடைகளிலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் மீன்களை சோதனை செய்தனர்.



இந்த சோதனையில், பார்மலின் கலந்திருப்பதை கண்டுபிடிக்கும், ராபிட் புளோரசென்ட் பார்மலின் (Rapid fluorescent formalin) என்ற நவீன கருவி மூலம் ஆராயப்பட்டது. அப்போது மீன்களில் பார்மலின் திரவம் தெளிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து, பார்மலின் தெளித்த மீன்களை தவிர்ப்பது தொடர்பாக வியாபாரிகளுக்கு விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

இது குறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை கூறுகையில், "மீன்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் வேதிப்பொருட்கள் கலந்து விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் சோதனை நடத்தினோம்.

மீன்களை ஒரு முறைக்கு மூன்று முறைக்கு மேல் கழுவ வேண்டும் என்றும், விற்பனையாளர்கள் மீன்களை பதப்படுத்துவதற்காக எந்த விதமான வேதிப் பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினோம். 



அப்படி வேதிப்பொருட்கள் கலந்த மீன்கள் வந்தால் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளோம். 

தற்போது கேரளாவில் மீன்பிடி தடை காலமாக இருப்பதால் நமக்கு ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்கள் வருகிறது. அதனால் தற்போது வரை வேதிப்பொருட்கள் மீன்களில் கலந்து வருவதற்கான எந்த வாய்ப்பும் கிடையாது. அதேபோல நாங்கள் தொடர்ந்து ஆய்வுகள் செய்து வருவதால் மீன் மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு வேதிப்பொருட்கள் கலப்படமற்ற மீன்கள் விற்பனை செய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது." என்றார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...