கோவை: வால்பாறையில் உள்ள குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால் அங்கு குளிக்க தொடர்ந்து 12-வது நாளாக தடை நீடிக்கிறது.

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள அருவிகள் மற்றும் ஆறுகளில் நீர் காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்து வருகிறது.
இதன் காரணமாக, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்குள்ள குரங்கு அருவியில் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டனர். கடந்த 12 நாட்களுக்கு முன்னர் போடப்பட்ட உத்தரவு இன்னும் நீடிக்கிறது.
இதன் காரணமாக அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.