தொடங்கியது லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் : கோவையில் 15,000 லாரிகள் இயங்கவில்லை

கோவை: டீசல் விலை உயர்வு, சுங்க வரி கட்டணம் உயர்வு, காப்பீடு விலை உயர்வு போன்றவற்றை குறைக்கக் கோரியும், முறைப்படுத்தக் கோரியும் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நாடு முழுவதும் இன்று தொடங்கியது.



கோவை: டீசல் விலை உயர்வு, சுங்க வரி கட்டணம் உயர்வு, காப்பீடு விலை உயர்வு போன்றவற்றை குறைக்கக் கோரியும், முறைப்படுத்தக் கோரியும் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நாடு முழுவதும் இன்று தொடங்கியது.

அனைத்து இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பாக அழைக்கப்பட்டுள்ள இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம், கோவை லாரி உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட 135 லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.



தமிழகத்தில் சுமார் 5 லட்சம் இயங்குகின்றன. இவை அனைத்தும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கோவையைப் பொறுத்தவரையில் சுமார் 15 ஆயிரம் லாரிகள் இயங்குகின்றன. இந்த லாரிகள் அனைத்தும் வேலை நிறுத்ததில் பங்கேற்றுள்ளன.

அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்களான பால், மருத்து, தண்ணீர் போன்றவற்றை ஏற்றிச் செல்லும் லாரிகள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.



இது குறித்து கோவை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கே.கலியபெருமாள் கூறுகையில், "காந்தியின் வழியான அகிம்சை வழியில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.10 கோடி வரை வர்த்தக இழப்பு ஏற்படும்" என்றார். 



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...