உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலப் பணிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

கோவை: உக்கடம் - ஆத்துப்பாலம் இடையிலான மேம்பாலத்தின் வரைபடத்தை வெளியிட்டு, பொதுமக்களிடம் கருத்துகேட்க வேண்டும் என தி.மு.க., மற்றும் அதன் தோழமை கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

கோவை: உக்கடம் - ஆத்துப்பாலம் இடையிலான மேம்பாலத்தின் வரைபடத்தை வெளியிட்டு, பொதுமக்களிடம் கருத்துகேட்க வேண்டும் என தி.மு.க., மற்றும் அதன் தோழமை கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே உயர்மட்ட மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மேம்பால பணிகளுக்காக கோவை தெற்கு உக்கடம் சி.எம்.சி., காலனி பகுதியில் வசித்து வரும் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்தவர்களை தற்காலிகமாக வேறு இடங்களுக்கு செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தப் பகுதிகளில் தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் தலைமையில் தோழமை கட்சித் தலைவர் ஆய்வு நடத்தி பொதுமக்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தனர். 

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நா. கார்த்திக் கூறியதாவது :- மேம்பாலப் பணிகளுக்காக காலி செய்யப்படும் மக்களுக்கு தற்காலிக இடத்தை அரசே வழங்க வேண்டும். மேம்பாலப் பணிகள் முடிந்தவுடன் மீண்டும் அதே இடங்களுக்கு மக்கள் திரும்புவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், உக்கடம் மேம்பாலத்தின் வரைபடத்தை வெளியிட்டு மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்தால் மேம்பாலத்தின் தற்போதைய வரைபடத்தை மாற்றியமைக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். 

இந்த ஆய்வின் போது காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., தந்தை பெரியார் திராவிடர் கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, சமூக நீதி கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து உக்கடம் மேம்பாலத்தின் வரைபடத்தை வெளியிட்டு மக்களிடம் கருத்துகேட்க வேண்டும் எனவும், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மேம்பாலப் பணிகளை தொடங்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...