கோவை: எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு கோவையில் வரும் 20-ம் தேதி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட சிறுதொழில்கள் சங்கமான கொடிசியா அமைப்பு கடந்த 2015முதல் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழானை நடத்தி வருகிறது. சென்னை, ஈரோடு புத்தகத் திருவிழாக்களைப் போலவே தமிழகத்தின் பிரதானமான புத்தகத் திருவிழாக்களுள் ஒன்றாக புத்தக ஆர்வலர்களால் பெரிதும் கொண்டாடப்படும் நிகழ்வாக கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா திகழ்கிறது.
சுமார் 275 ஸ்டால்கள், லட்சக்கணக்கான புத்தகங்கள், ஏராளமான கலை நிகழ்ச்சிகள், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் என பத்து நாட்கள் கொண்டாட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா வரும் நாளை முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
புத்தகத் திருவிழாவின் சிறப்பம்சமாக ஒவ்வொரு ஆண்டும் இலக்கியத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்பினை ஆற்றிய எழுத்தாளர் ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
2016-ஆம் ஆண்டிற்கான விருது எழுத்தாளர் பாலகுமாரனுக்கும், 2017-ஆம் ஆண்டிற்கான விருது எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் வழங்கப்பட்டது. 2018-ஆம் ஆண்டிற்கான விருது பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது ஒரு லட்சம் ரூபாய் தொகையும் பாராட்டுப் பத்திரமும் உள்ளடக்கியது.
கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா தொடக்கவிழாவும் விருது வழங்கும் நிகழ்ச்சியும் ஜூலை 20-ஆம் தேதி கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் டி. உதயச்சந்திரன், சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் கவிஞர் சிற்பி பலசுப்பிரமணியம்,கொடிசியா தலைவர் ஆர். ராமமூர்த்தி, புத்தகத் திருவிழா தலைவர் எஸ். செளந்தரராஜன், இலக்கியக்கூடல் தலைவர் டி. பாலசுந்தரம்,அறிவுக்கேணி தலைவர் ஈ.கே. பொன்னுசாமி, தொழிலாளர் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கவிதாசன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.