வெள்ளப்பெருக்கால் மூழ்கிப்போன படகு இல்லம்: மறு தேதி அறிவிப்பு இல்லாமல் பரளிக்காடு சூழல் சுற்றுலா ரத்து

கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான பரளிக்காடு என்னுமிடத்தில் தமிழ்நாடு வனத்துறை மற்றும் பழங்குடியின மக்கள் இணைந்து நடத்தும் சூழல் சுற்றுலா மறு தேதி அறிவிக்கப்படாமல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான பரளிக்காடு என்னுமிடத்தில் தமிழ்நாடு வனத்துறை மற்றும் பழங்குடியின மக்கள் இணைந்து நடத்தும் சூழல் சுற்றுலா மறு தேதி அறிவிக்கப்படாமல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை எழில் மிகுந்த மலைக்காட்டின் நடுவே அமைந்துள்ள பில்லூர் அணையின் நீர்த்தேக்க பகுதியின் கரையோரத்தில் படகு இல்லம் அமைக்கப்பட்டு நடத்தப்படும் இந்த சூழல் சுற்றுலாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். 

இயற்கையுடன் ஒரு நாள் இணைந்திருக்க விரும்புவோர் பலரும் வனத்துறையிடம் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். வார விடுமுறை நாட்களில் நடத்தப்படும் இச்சூழல் சுற்றுலாவில் காட்டின் நடுவே ஓடும் ஆற்றில் பரிசல் பயணம், ஆற்றுக்குளியல், பழங்குடியின மக்கள் தயாரித்து வழங்கும் சுவையான இயற்கை உணவு, பாரஸ்ட் ட்ரக்கிங் ஆகியவை வனத்துறையினரின் கண்காணிப்பில் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இம்மாதம் தொடக்கம் முதலே மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. இதனால் கடந்த பத்தாம் தேதி பில்லூர் அணை முழுமையாக நிறைந்து அதன் உபரி நீர் பவானியாற்றில் வெளியேற்றப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 



இதன் காரணமாக சூழல் சுற்றுலாவின் படகு இல்லப்பகுதி மற்றும் இதன் சுற்றுப்புற இடங்கள் அனைத்தும் நீருக்கடியில் மூழ்கிப்போனது. சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வந்த பரிளிக்காடு பகுதி முழுவதும் தற்போது வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் வனத்துறையினர் சூழல் சுற்றுலாவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். 



மேலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் எப்போது நீர்வடியும் என தெரியாத காரணத்தினால் மறு தேதி அறிவிக்கும் வரை பரளிக்காடு சூழல் சுற்றுலாவின் முன்பதிவு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...