தொடரும் பருவமழை; வரத்து குறைந்து காணப்படுவதால், நீலகிரி காய்கறிகளின் விலை அதிகரிப்பு

நீலகிரி: தென்மேற்கு பருவமழை தொடர்வதால் நீலகிரியில் காய்கறி வரத்து குறைந்து, விலை அதிகரித்து வருகிறது.


நீலகிரி: தென்மேற்கு பருவமழை தொடர்வதால் நீலகிரியில் காய்கறி வரத்து குறைந்து, விலை அதிகரித்து வருகிறது.

 

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், இங்கு கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், காளிபிளவர், பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. குளிர் பிரதேசத்தில் இந்த மலை காய்கறிகள் அதிக விளைச்சலைத் தருவதால், நீலகிரி மாவட்ட விவசாயிகள் மலை காய்கறிகளை அதிகளவில் பயிரிட்டு வருகிறார்கள். 



அறுவடை செய்யப்படும் மலை காய்கறிகள் சரக்கு வாகனங்கள், லாரிகள் மூலம் மேட்டுப்பாளையம், கோவை, அவினாசி, திருச்சி, சென்னை, பெங்களூர் போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.



பருவமழை

நீலகிரியில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மலை காய்கறிகள் பயிரிடப்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி சேறாக உள்ளது. அதன் காரணமாக காய்கறிகளை அறுவடை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

மேலும், தொடர் மழையால் காய்கறிகள் அழுகியும் வருகின்றன. சில விவசாயிகள் முன்கூட்டியே காய்கறிகளை அறுவடை செய்து விட்டனர். இருந்தாலும், தென்மேற்கு பருவமழையால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு மலை காய்கறிகள் வரத்து குறைவாக உள்ளது.



இதனால் காய்கறிகள் விலை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக பொதுமக்கள் தங்களது வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை முழுமையாக வாங்க முடியாமல் அவதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து வியாபாரி பிரபாகரன் கூறுகையில், "ஊட்டி நகராட்சி சந்தையில் பீட்ரூட் கிலோ ரூ.35 முதல் ரூ.38 வரையும், உருளைக்கிழங்கு ரூ.55 முதல் ரூ.70 வரையும், கேரட் ரூ.30 முதல் ரூ.40 வரையும், முட்டைக்கோஸ்-ரூ.12, பீன்ஸ்-ரூ.65, முள்ளங்கி-ரூ.20, டர்னீப்- ரூ.30, நூல்கோல்-ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த பீன்ஸ் வரத்து குறைவால் ரூ.65 ஆக விலை அதிகரித்துள்ளது. விளைநிலங்களில் விவசாய தொழிலாளர்கள் அறுவடை பணியில் ஈடுபட்டால், அவர்களது கால்கள் சேற்றில் பதியும் நிலை காணப்படுகிறது. காய்கறிகள் வரத்து குறைவால் வெளியிடங்களுக்கு அனுப்புவதும் குறைந்து உள்ளது. மழை குறைந்தால் தான் காய்கறிகள் வரத்து அதிகரிக்கும்." என்றார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...