திருப்பூர்: நெகிழி இல்லா திருப்பூர் என்பதன் அடிப்படையில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பை வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருப்பூர்: நெகிழி இல்லா திருப்பூர் என்பதன் அடிப்படையில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பை வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, திருப்பூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாகவே பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை குறைக்க மாவட்ட நிர்வாகம் சார்பிலும், சமூக அமைப்புகள் சார்பிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், திருப்பூர் சப் கலெக்டர் அலுவலகத்தில் இன்று 'பிளாஸ்டிக் இல்லா திருப்பூர்' அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் பைகளை கொண்டு வந்தவர்களிடம் துணிப்பை வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சப்கலெக்டர் ஷ்ரவண்குமார் தலைமையில் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.