கோவை: இந்தாண்டு இறுதிக்குள் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என்று கோவையை சேர்ந்த வானம் அறக்கட்டளை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு சவால் விடுத்துள்ளனர்.
கோவை: இந்தாண்டு இறுதிக்குள் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என்று கோவையை சேர்ந்த வானம் அறக்கட்டளை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு சவால் விடுத்துள்ளனர்.
கோவை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான வானம் அறக்கட்டளை கடந்த உலக சுற்றுச்சூழல் தினத்தன்று ராமகிருஷ்ணா வித்யாலயா-வில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தாண்டு ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு செய்ய இலக்கு நிர்ணயித்தனர்.
அதனை மேலும் வலுப்படுத்தும் விதமாக, இளைஞர்கள் மற்றும் மக்களுக்கு சவால் மரக்கன்றுகளை நடவு செய்ய சவால் விடுத்துள்ளனர். இந்த ஆண்டுக்குள் இந்த சவாலை நிறைவற்றே வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதில் பங்கேற்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் இணைந்து ஒரு மரக்கன்றை நடவு செய்து, அதனுடன் செல்பி எடுத்து அதனை வானம் அறக்கட்டளைக்கு அனுப்பும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு:-
வானம் அறக்கட்டளையின் பேஸ்புக் பக்கம் : https://www.facebook.com/groups/1179922475484283/
மின்னஞ்சல் முகவரி : [email protected]
வாட்சாப் எண் : 9894377785